தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்


தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்
x
தினத்தந்தி 9 Jun 2019 3:45 AM IST (Updated: 9 Jun 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்- பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் வருகிற 14-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், முதலாமாண்டு தேர்வுகள் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

அரியலூர்,

அரியலூர்- பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வின் இரண்டாமாண்டு தேர்வுகள் வருகிற 14-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், முதலாமாண்டு தேர்வுகள் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வினை எழுத இருக்கும் தனித்தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும்www.dge.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிந்து தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த தகவல் மாவட்ட கலெக்டர்கள் விஜயலட்சுமி (அரியலூர்), சாந்தா (பெரம்பலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

Next Story