தக்கலை அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
தக்கலை அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே பாறக்கடை பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் வயக்கரை, கப்பியறை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமானவர்கள் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை அமையும் பட்சத்தில் பாறக்கடை, கப்பியறை போன்ற பகுதிகளுக்கு செல்வதற்காக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, பொதுமக்கள் வசதிக்காக நான்கு வழிச்சாலை குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
போராட்டம்
இந்த நிலையில் பாறக்கடை, கப்பியறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு கூடி நான்குவழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து தகவலறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story