உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
கரூர்,
உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில், உணவுப்பொருட்களில் கலப்படங்களை கண்டறிதல், தடைசெய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை பயன்படுத்துவதால் வரும் தீமைகள், ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் குறித்த விளக்கங்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் கேடுகள், செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தம் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை கலெக்டர் அன்பழகன் பார்வியிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் உணவு பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றனர். மாணவிகளும் இந்த அரங்குகளை பார்வையிட்டு அதற்கான விளக்கங்களையும் விரிவாக கேட்டறிந்தனர்.
அதனைத்தொடர்ந்து தெரசா மேல்நிலைப்பள்ளியில் இருந்து சுமார் 700 மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் பாதுகாப்பான சத்தான உணவுப்பொருட்கள் உட்கொள்வது குறித்தும், தவறான உணவுப் பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பள்ளி வளாகத்திலிருந்து, சுங்ககேட் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். அதன்பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த “கையெழுத்து பலகையில் தமது வாழ்த்துக்களுடன் கையொப்பம் இட்டார்.
இதில் உணவுப் பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அதிகாரி சசிதீபா, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) நிர்மல்சன், கரூர் நகர் நல அலுவலர் ஸ்ரீப்ரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் (தாந்தோனி மற்றும் கரூர்), உணவு வணிகர்கள் சங்க உறுப்பினர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story