சிங்கபெருமாள் கோவிலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு டாக்டரிடம் போலீசார் விசாரணை


சிங்கபெருமாள் கோவிலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு டாக்டரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Jun 2019 9:26 PM GMT (Updated: 8 Jun 2019 9:26 PM GMT)

சிங்கபெருமாள் கோவிலில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் வி.ஜி.என். நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரேவதி (வயது 28). இவர் ஏற்கனவே சிசேரியன் முறையில் குழந்தை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3-வதாக ரேவதி கர்ப்பம் அடைந்தார். ரேவதி தனது உடலை பரிசோதனை செய்வதற்காக சிங்கபெருமாள் கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கணவருடன் சென்றார்.

தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் ரேவதியை பரிசோதித்து விட்டு 3-வதாக சிசேரியன் மூலம் குழந்தை பெற்றால் அவரது உயிருக்கு ஆபத்து என்றும், அதனால் அவரது கர்ப்பத்தை கலைத்து விடுங்கள். அதுவே நல்லது என்றும் டாக்டர் கூறியுள்ளார்.

கருக்கலைப்பு

இதனை நம்பி ரமேஷ் தனது மனைவியின் கருவை கலைப்பதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரேவதிக்கு டாக்டர் கருக்கலைப்பு செய்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்றுள்ளார். உடனே டாக்டர் ரேவதியின் கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்

இதையடுத்து ரேவதியை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாவு

அங்கு பரிசோதித்த டாக்டர் கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story