21-ந் தேதி சென்னையில் த.மா.கா. நிர்வாகிகள் கூட்டம் - ஜி.கே.வாசன் தகவல்
த.மா.கா. நிர்வாகிகள் கூட்டம் வருகிற 21-ந்தேதி சென்னையில் நடைபெறும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னிமலை,
சென்னிமலையில் த.மா.கா. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில் த.மா.கா. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவது மற்றும் வெற்றிபெறுவதற்கான ஆலோசனைகள் நடைபெறும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வரும் இந்த தருணத்தில் தமிழகத்துக்கான மக்கள் நலத்திட்டங்களை பெற்றுத்தர த.மா.கா செயலாற்றும். இதேபோல் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை தங்கு தடையின்றி வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், த.மா.கா. மாவட்ட தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story