பவானி அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப சாவு


பவானி அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 9 Jun 2019 3:45 AM IST (Updated: 9 Jun 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் இறந்தனர்.

பவானி,

பவானி அருகே உள்ள எலவமலையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 51), இவருடைய பக்கத்து வீட்டுக்காரர் துரைசாமி (54). இருவரும் கட்டிட தொழிலாளர்கள்.

இவர்கள் இருவரும் சில நாட்களாக தாளவாடி மலை கிராமத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று மாலை இருவரும் மோட்டார்சைக்கிளில் எலவமலைக்கு வந்துகொண்டு இருந்தார்கள்.

பவானி அருகே உள்ள காடையாம்பட்டி ஏரி பகுதியில் வந்தபோது ரோட்டில் பஞ்சராகி டிராக்டர் ஒன்று செங்கல் பாரத்துடன் நின்றுகொண்டு இருந்தது. அப்போது கண்இமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீேழ விழுந்த வெங்கடாசலம், துரைசாமி இருவரும் படுகாயம் அடைந்தார்கள்.

உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டார்கள்.

இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த வெங்கடாசலத்துக்கு மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். துரைசாமிக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

Related Tags :
Next Story