கீழக்கரை அருகே குடிநீர் கிடைக்காமல் பரிதவிக்கும் கிராம மக்கள்


கீழக்கரை அருகே குடிநீர் கிடைக்காமல் பரிதவிக்கும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:00 AM IST (Updated: 9 Jun 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை அருகே குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

கீழக்கரை,

கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சின்ன பாளையேந்தல், மாவிலாதோப்பு, மருகன்தோப்பு ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இங்குள்ள குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.

இதனால் இந்த 3 கிராமத்தில் வாழும் பொதுமக்கள் ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு வரும் குடிநீர் குழாயில் கசியும் தண்ணீரை பிடித்து உபயோகித்து வருகின்றனர். மேலும் நீண்டதூரம் சென்று பல மணி நேரம் காத்திருந்து குடிதண்ணீர் எடுத்து வரும் நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த 3 கிராமங்களுக்கும் குடிநீர் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story