எழுமலை அருகே பரிதாபம்: புறா பிடிக்க சென்று உயிரை விட்ட மாணவர்


எழுமலை அருகே பரிதாபம்: புறா பிடிக்க சென்று உயிரை விட்ட மாணவர்
x
தினத்தந்தி 9 Jun 2019 4:35 AM IST (Updated: 9 Jun 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

எழுமலை அருகே புறா பிடிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்து மாணவர் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி,

எழுமலை அருகே உள்ள சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மகன் பழனிசாமி (வயது 18). இவர் இந்த தற்போது பிளஸ்–2 முடித்துவிட்டு, உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மேல்படிப்பிற்காக விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனிசாமி மற்றும் அவருடைய நண்பர்கள் பால்பாண்டி, அருண், வீரபத்திரன் உள்பட 6 பேர் எழுமலை அருகே உள்ள வங்கிநாராயணபுத்தில் உள்ள கிணறு ஒன்றில் புறா பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது பழனிசாமி எதிர்பாராத விதமாக கால் இடறி கிணற்றினுள் விழுந்துவிட்டார். இதனால் அவருடன் வந்த நண்பர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

உடனே நண்பர்கள் அக்கம்பக்கத்தினரை அழைத்து அவர்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்த பழனிசாமியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினம் நள்ளிரவில் பழனிசாமி பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புறா பிடிக்கச் சென்று மாணவர் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story