மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம் + "||" + AIADMK alliance with BJP in parliamentary elections Failed - Minister CV Shanmugam Speech

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம்
நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர்கள் டி.வி.குமார், வீரப்பன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் குணசேகரன் வரவேற்றார்.


கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று யாரும் ஓட்டு போடவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துதான் மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர்.

இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. சிறுபான்மை ஓட்டுகளை இழந்ததற்கு காரணமே பா.ஜனதா கட்சிதான். தேர்தல் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம்.

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் தோண்டி எடுத்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்முடிக்கு தண்டனை கிடைப்பது உறுதி.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உண்மை வெற்றி பெற்றுள்ளது: ரபேல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜக கருத்து
ரபேல் வழக்கில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2. இந்திய பசுவின் பால் ஏன் மஞ்சளாக உள்ளது, அதில் தங்கம் இருக்கு! கண்டுபிடித்த பாஜக தலைவர்
இந்திய பசுவின் பால் ஏன் மஞ்சளாக உள்ளது தெரியுமா? அதில் தங்கம் இருக்கு என்று மேற்கு வங்காள பாஜக தலைவர் கூறி உள்ளார்.
3. பாரதீய ஜனதா - சிவசேனாவின் நாடகத்துக்கு துணை போய் விடக்கூடாது காங்கிரஸ் தலைவர்களுக்கு சஞ்சய் நிருபம் எச்சரிக்கை
பாரதீய ஜனதா- சிவசேனா இடையேயான மோதல் ஆட்சி அதிகாரத்தில் அதிக பங்கு பெற நடத்தப்படும் நாடகம் என்பதால் அதற்கு துணை போய் விடக்கூடாது என காங்கிரஸ் தலைவர்களுக்கு சஞ்சய் நிருபம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
4. இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி அ.தி.மு.க.வினரிடையே எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
5. பாரதீய ஜனதா - சிவசேனா கூட்டணி: ஆட்சி அமைப்பதில் இழுபறி முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் சிக்கல் நீடிக்கிறது
முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பதில் சிக்கல் நீடிப்பதால், மராட்டியத்தில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.