மக்களுக்கு எதிரான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது முத்தரசன் குற்றச்சாட்டு
மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது என புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் சிவகாமி ரத்ததான கழகத்தின் சார்பில் 100-வது ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மூர்த்தி தலைமை தாங்கினார். மக்கள் நீதி மய்யம் சினேகன் முன்னிலை வகித்தார். முகாமை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
தொடர்ந்து முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த பிரச்சினையை எதிர்க்கட்சியினர் பார்த்து கொள்வார்கள் என்று பேசியது பொறுப்பற்ற பேச்சு. தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி கர்நாடகாவில் மேகதாது அணையை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுவோம் எனக்கூறவில்லை. தவறான தகவலை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் பேசி வருகிறார். இந்த பிரச்சினையில் அவர் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக ராகுல் காந்தி மீது பழியை போடுகிறார்.
இந்த ஆண்டாவது தமிழகத்தில் குறுவை சாகுபடி நடைபெறும் என விவசாயிகள் நம்பியிருந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 12-ந் தேதி நீர் திறக்கப்படாது என்று அரசு அறிவித்து உள்ளது. விவசாயிகள் மத்தியில் வேதனை அடைய செய்துள்ளது.
ஆணைய உத்தரவுப்படி 9 டி.எம்.சி தண்ணீரை தமிழக அரசும், மத்திய அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தங்களுடைய கட்சி தலைமை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆட்சியை கலைந்தாலும், புதுச்சேரியில் செயல்படுத்த விடமாட்டோம் என்று அந்த மாநில முதல்-அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
ஆனால் தமிழக முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்? மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி, 8 வழி சாலை திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான செயல்பாட்டையே அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் அரசு ஆய்வு செய்து முறையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story