கோவையில் இருந்து உடுமலை வழியாக தூத்துக்குடி, ராமேசுவரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விட வேண்டும்; அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
கோவையில் இருந்து உடுமலை வழியாக ராமேசுவரம், தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உடுமலை,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் உடுமலை வட்டக்கிளை 3-வது மாநாடு உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்.கே.தனுஷ்கோடி தலைமையில் நடந்தது. மாநாட்டை மாவட்ட பொருளாளர் கி.மேகவர்ணன் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் 2019- 2022 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
உடுமலை வட்டக்கிளை தலைவராக எஸ்.கே.தனுஷ்கோடி, செயலாளராக தா.இ.தாசன், பொருளாளராக பி.எஸ்.சுரேஷ் குமார், துணைத்தலைவர் களாக எஸ்.விஜயவர்மன், தி.பரிமேலழகன்,பா.ராம நாதன் ஆகியோரும், இணைச்செயலாளர்களாக கே.ஆறுமுகம், சுப.வீரபாண்டியன், எம்.சிவபாக்கியம் ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 12 செயற்குழு உறுப்பினர்களும், மாவட்ட செயற்குழு உறுப்பினராக வி.ரவிச்சந்திரனும், தணிக்கையாளராக பெரிய.கோவிந்தராஜனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் மு.பாலச்சந்திரமூர்த்தி, மாநில துணைத்தலைவர்கள் எஸ்.சந்திரன், ஆர்.ஜோதி ஆகியோர் பேசினார்கள். இணைச்செயலாளர் எம்.சிவபாக்கியம் நன்றி கூறினார்.
மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பணி ஓய்வு பெறுகிறவர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பாணையுடன் அவர்களது பணிப்பதிவேடுகள் மற்றும் ஓய்வூதிய முன்மொழிவு ஆகியவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் வழங்கப்படவேண்டும். உடுமலையில் கொழுமம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்.
மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகளுக்காக நிறுத்தப்பட்ட உடுமலை வழியாக சென்று வந்த கோவை - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ,கோவை- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றை மீண்டும் இயக்க வேண்டும் என தென்னக ரெயில்துறையை கேட்டுக்கொள்வது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story