புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை தேவை - ரங்கசாமி வலியுறுத்தல்


புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை தேவை - ரங்கசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 Jun 2019 4:30 AM IST (Updated: 10 Jun 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி ராயல் எல்க்ட்ரிக்கல்ஸ் சார்பில் மின் பணியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென என வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை அண்ணா சாலையில் உள்ள ராயல் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் ஹேவல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் மின்பணியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். ஹேவல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன சீனியர் மேலாளர் மோகன்ராம் முன்னிலை வகித்தார். தொழிற்சங்க தலைவர் செல்வம் வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் ரங்கசாமி பேசுகையில், ‘நாம் அனைவரும் நவீன உலகில் வாழ்ந்து வருகிறோம். வீட்டில் ஒரு நிமிடம் மின்தடை ஏற்பட்டால் பெரும் அவதிக்குள்ளாகிறோம். புதிதாக வீடு கட்டுபவர்கள் தரமான மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும். எனவே மின் பணியாளர்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தரமான நிறுவனத்தின் பொருட்களை பரிந்துரை செய்ய வேண்டும். இதன் மூலமாக பல்வேறு விபத்துகள் குறைய உள்ளது.

புதுச்சேரியில் ரியல் எஸ்டேட் விற்பனை மந்தமாகிவிட்டது. நிலத்தை வாங்கவோ, விற்பனை செய்யவோ விற்பனையாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதேபோல் வீடு கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் தட்டுபாடு நிலவுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story