கூத்தாநல்லூர் அருகே தீயில் எரிந்து கூரை வீடுகள் நாசம் ரூ.1½ லட்சம் பொருட்கள் சேதம்


கூத்தாநல்லூர் அருகே தீயில் எரிந்து கூரை வீடுகள் நாசம் ரூ.1½ லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 11 Jun 2019 4:30 AM IST (Updated: 11 Jun 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே தீயில் எரிந்து 2 கூரை வீடுகள் நாசமடைந்தன. இதில் ரூ.1½ லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை மேலத்தெருவை சேர்ந்தவர்கள் அந்தோணிமேரி(வயது 78), வின்சென்ட்(65). இவர்களது கூரை வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் தங்கள் வீடுகளில் இல்லை. இதனால் வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன. மாலை சுமார் 6 மணி அளவில் ஒரு கூரை வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் மற்றொரு வீட்டிலும் தீப்பிடித்தது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் அந்தோணிமேரி, வின்சென்ட் ஆகிய இருவரின் கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமடைந்தன. இதில் வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, டி.வி. மோட்டார் சைக்கிள் மற்றும் சான்றிதழ்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story