ஜானகிராமன் மறைவுக்கு கவர்னர் கிரண்பெடி, தலைவர்கள் இரங்கல்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மறைவினையொட்டி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மறைவுக்கு கவர்னர் கிரண்பெடி மற்றும் புதுவையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கவர்னர் கிரண்பெடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மறைவினால் புதுச்சேரி பழம்பெரும் அரசியல்வாதிகளுள் ஒருவரை இழந்துவிட்டது. புதுச்சேரியின் முதல்-அமைச்சராகவும், தி.மு.க.வின் அமைப்பாளராகவும் விளங்கிய ஜானகிராமன் தனது அரசியல் மதிநுட்பத்துக்கும், நிர்வாக திறமைக்கும் அறியப்பட்டவராவார். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஜானகிராமன் மறைவு புதுவை மாநிலத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அரசியல் வேற்றுமை பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய எதார்த்தமான அரசியல் தலைவர். திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கடின உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து புதுவை தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர்.
கருணாநிதி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் நெஞ்சில் நீக்கமற நிறைந்த ஜானகிராமனின் மறைவு புதுவை தி.மு.க.வுக்கு பேரிழப்பாகும். அவரது மறைவினால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் பிறந்து தொழில் நிமித்தமாக சென்னை சென்றபோது தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பணியாளராக வாய்ப்பு கிடைக்கப்பெற்று அதிலிருந்து தி.மு.க.வில் தன்னை முழுமையான தொண்டராக ஈடுபடுத்திக்கொண்டவர் ஜானகிராமன். புதுவையில் தொழில் தொடங்கியது முதல் கழக பணிகளில் துணை நின்று செயல்பட்டவர். தனது வேகமான கழக பணியின் காரணமாக 1988-ல் புதுவை மாநில பொருளாளராக பொறுப்பேற்றார்.
1985-ல் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டசபையில் சிறப்பான பணிகளை தொடங்கியவர். 1996 சட்டமன்ற தேர்தலில் கழகத்தை வெற்றிபாதையில் அழைத்துவந்து தனது தலைமையில் ஆட்சி அமைத்தவர். அவர் முதல்-அமைச்சராக பணியாற்றிய அந்த குறைந்த காலத்தில் மிகச்சிறப்பான நிர்வாகத்தையும், அடித்தள மக்களுக்கான சாதனைகளையும் புதுவை மாநிலத்துக்கு வழங்கியவர்.
புதுவை கடற்கரை சாலையில் அம்பேத்கர் மணிமண்டபத்தை நிறுவி அப்போதைய துணை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனை அழைத்து வந்து திறப்பு விழா செய்தவர். மாநிலத்தில் முதன்முதலாக தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கி ரூ.10 ஆயிரம் கட்டணத்தில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களும், ரூ.5 ஆயிரத்தில் பொறியியல் இடங்களும் மாணவர்களுக்கு கிடைக்க வழிவகுத்தவர். ஆதிதிராவிட மாணவிகளுக்கு முதல் முறையாக இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.
பஞ்சாலை தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் எவ்வித போராட்டமும் இன்றி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே போனஸ் வழங்கியவர். அரசு கோப்புகளை தமிழில் தயாரிக்க வழிவகுத்தவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு சமூகநீதி வழங்கும் நோக்கில் குழுக்கள் அமைத்து நீதி வழங்கியவர்.
தொழில் வளர்ச்சியை மேற்கொள்ள முதன்முதலாக புதுச்சேரி மாநில தொழிற்கொள்கையை உருவாக்கி அதன் மூலம் திருபுவனையில் எலக்ட்ரானிக் பார்க் என்ற தொழிற்பேட்டையை ஏற்படுத்தியவர். புதுவை மாநிலத்தின் முதல்-அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், ஒருங்கிணைந்த மாநில அமைப்பாளராகவும் செயல்பட்டு கழக வளர்ச்சிக்கும், மாநில மேம்பாட்டிற்கும் சிறப்பாக பணியாற்றியவர். அவரது பணி கழக தோழர்களுக்கு முன் உதாரணமாக திகழும். அவரது மறைவு புதுவை மாநிலத்துக்கும், தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய இழப்பாகும்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுவை மாநில தி.மு.க.வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒருவார காலம் தள்ளிவைக்கப்படுவதுடன் கழக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடல் ஆலத்தூர் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இறுதி சடங்கு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார். இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில கழக உடன்பிறப்புகள் திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்த கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜானகிராமன் இயற்கை எய்தினார் என்ற துயர செய்தி ஆழ்ந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. டிரைவராக தனது பணியை தொடங்கிய அவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலிமாறன், பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக பழகியவர்.
ஜானகிராமன் தனது பதவி காலத்தில் திறம்பட செயல்பட்டார். அரசின் கோப்புகள் தமிழில் வரவேண்டும், குறிப்புகளும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக நின்றார். ஆங்கிலம் எழுத, பேச தெரியாதவர் அரசின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? என்று விமர்சித்த காலத்தில் தனது செயல்பாட்டால் சிறந்த நிர்வாகத்தை தர முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர். புதுவை மாநிலம் ஒரு சிறந்த நிர்வாகியை, வளர்ச்சிக்கு வித்திட்டவரை இழந்துவிட்டது. அவரை இழந்து நிற்கும் தி.மு.க.வின் தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

Related Tags :
Next Story