மாவட்ட செய்திகள்

நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு உச்சிப்புளியில் மத்திய– மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் + "||" + Resistance to a four-lane highway Condemned the federal and state governments Demonstration

நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு உச்சிப்புளியில் மத்திய– மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு உச்சிப்புளியில் மத்திய– மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்–தனுஷ்கோடி நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சிப்புளியில் பொதுமக்கள் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பனைக்குளம்,

மதுரை–பரமக்குடி நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து பரமக்குடி–ராமநாதபுரம் மற்றும் ராமநாதபுரம்–தனுஷ்கோடி வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு தற்போது நான்கு வழிச்சாலைக்கு சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் பாதிக்கப்படுவதால் இந்த சாலைக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. மேலும் இந்த சாலையை மாற்றுப்பாதையில் செயல்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உச்சிப்புளி நகருக்குள் நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தம் பகுதியில் வர்த்தக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சீனிவாசன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க தலைவர் அசரியா, ஆர்.ஆர்.ராமச்சந்திரன், கம்யூனிஸ்டு கட்சி ராமசாமி, வர்த்தகர்கள் முகமது நஹீப், ரவி, அமீன், செல்வம், ரஹீப் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம்–தனுஷ்கோடி நான்கு வழிச்சாலையை உச்சிப்புளி நகருக்கு வெளியே புறவழிச்சாலையாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், உச்சிப்புளியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அடுத்த கட்டமாக உச்சிப்புளியில் சாலை மறியலில் ஈடுபடுவது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து இணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே தொடங்கக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. கூட்டுறவு வங்கி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கிகளில் செயலாளர்களை பணியிட மாற்றம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கிருஷ்ணகிரியில் ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் சார்பில் கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.