மாவட்ட செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே சமையல் செய்தபோது தீ விபத்து; தாய்–மகன் தீயில் கருகினர் + "||" + Fire accident when cooked

ஊத்துக்கோட்டை அருகே சமையல் செய்தபோது தீ விபத்து; தாய்–மகன் தீயில் கருகினர்

ஊத்துக்கோட்டை அருகே சமையல் செய்தபோது தீ விபத்து; தாய்–மகன் தீயில் கருகினர்
ஊத்துக்கோட்டை அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், தாயும், மகனும் தீயில் கருகினர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39). கணவரை இழந்தவர். இவரது மகன் மதன் (19). சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சமையல் செய்ய லட்சுமி அடுப்பு பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து கொண்டது.

இதனால் அவர் அலறியடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினார். அப்போது கல்லூரி முடித்து விட்டு வீடு திரும்பிய மதன் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.

அப்போது அவர் மீதும் தீ பரவியது. தாய், மகன் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயில் கருகிய தாய், மகனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளமேனி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (33). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஹேமாவதி (28). இவர் தன் வீட்டில் சமையல் செய்யும்போது நிலை தடுமாறி திடீர் என்று அடுப்பு மீது விழுந்து விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. விருதுநகரில் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடம் இடிந்து விழும் அபாயம்
விருதுநகரில் 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. அதனை உடனே இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2. வாடிப்பட்டி அருகே இருவேறு விபத்து; 14 பேர் படுகாயம்
வாடிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
3. வெவ்வேறு விபத்துகளில், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் சாவு
வெவ்வேறு விபத்துகளில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி
முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. திருவள்ளூர் அருகே குப்பையை கொளுத்தும் போது தீ பரவி 19 குடிசைகள் சேதம்; கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
திருவள்ளூர் அருகே குப்பையை கொளுத்தும் போது தீ பரவி 19 குடிசைகள் சேதம் அடைந்தன. இதில் 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.