மாவட்ட செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ரேஷன் கடையை அகற்ற எதிர்ப்பு - பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு + "||" + Resistance to remove the ration shop near Vellore new bus station - Public demonstration

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ரேஷன் கடையை அகற்ற எதிர்ப்பு - பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ரேஷன் கடையை அகற்ற எதிர்ப்பு - பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ரேஷன் கடையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் அண்ணாநகரில் ரேஷன்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையினை சுமார் 750 ரேஷன் அட்டை தாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கடையின் அருகே உள்ள காலி இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி அதிகாரிகள் கார் பார்க்கிங் அமைக்க உள்ளனர்.


இதற்காக அந்த இடத்தை சமப்படுத்தும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் ரேஷன் கடையையும் அகற்ற முடிவு செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ரேஷன் கடையில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லுமாறு கடை ஊழியர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை ரேஷன் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ரேஷன்கடையை பயன்படுத்தி வந்தோம். தொலைவில் அக்கடை இருந்ததால் பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பின்னர் எங்கள் பகுதியில் இந்த ரேஷன்கடையை கொண்டு வந்தோம். தற்போது இக்கடை, பகுதி நேரமாக செயல்படுகிறது.

இக்கடையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அவர்கள் மாற்று கடை அமைப்பது குறித்து எந்தவித தகவலும் ெதரிவிக்கவில்லை. இதை அகற்றிவிட்டால் நாங்கள் எந்த கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது என்ற குழப்பம் உள்ளது. இக்கடையை அகற்றக்கூடாது.

ரேஷன் கடைைய அகற்றாமல் கார் பார்க்கிங் அமைத்துக் கொள்ளட்டும். மேலும் ரேஷன் கடை அருகில் மாநகராட்சி தொடக்கப்பள்ள உள்ளது. இந்த பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி தர வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் ‘நமது புகைப்படத்துடன் கூடிய தபால்தலை’ பெற தனிப்பிரிவு
வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் ‘நமது புகைப்படத்துடன் கூடிய தபால்தலை’ பெறுவதற்கு தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
2. கீரிப்பாறை அருகே, ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை - தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து போராட்டம்
கீரிப்பாறை அருகே தரமற்ற அரிசி வழங்கியதை கண்டித்து ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. தொடர் மழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வேலூரில் தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
4. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கூடுதல் வாக்காளர் சேர்ப்பு சத்யபிரத சாகு தகவல்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
5. கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து மறியல்
கம்பத்தில் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.