இரைச்சலைத் தடுக்கும் கருவி
நகரங்களில் வாழ்பவர்களுக்கு மாசு தொந்தரவு மட்டுமின்றி வாகனங்களின் இரைச்சல் ஒலியும் பெரிய இம்சையாகவே இருந்து வருகிறது.
ஹை வே சாலை ஓரங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இந்த சப்தங்கள் மன நிம்மதியை இழக்க செய்யும். சிங்கப்பூர் விஞ்ஞானிகள் இதற்கு ஒரு தீர்வை கொண்டு வந்துள்ளனர். ஒலியைத் தடுக்கும் ஒரு கருவியை அவர்கள் அறிமுகப்படுத்திஉள்ளனர். அபார்ட்மெண்ட் அல்லது வீட்டில் இருக்கும் ஜன்னலில் இந்த கருவியை வைத்து விட்டால் வெளியே இருக்கும் ஒலிகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்கிறது.
இந்த கருவியில் மூன்று பகுதிகள் உள்ளன. ஒரு மைக்ரோ போன், ஒரு ஸ்பீக்கர் மற்றும் செயலாக்க பகுதி என்ற இந்த மூன்று இணைப்புகளும் ஒன்றாக செயல்படுகின்றன. இரைச்சல் ஒலிகளை மைக்ரோ போன் பதிவு செய்து செயலாக்க பகுதிக்கு அனுப்புகிறது.
அந்த ஒலிகளின் அலை வடிவத்தை எதிர் பிம்பங்களாக மாற்றி ஸ்பீக்கர் மூலம் சப்தத்தை நிசப்தமாக்குகிறது செயலாக்க பகுதி. இந்த கருவி முற்றிலும் இரைச்சலை நிறுத்தி நிம்மதியாக இருக்க செய்கிறது. ஜன்னல் கதவுகளை திறந்து வைத்திருந்தாலும் சத்தங்கள் உள்ளே நுழைவதில்லை.
Related Tags :
Next Story