வானவில் : சிக்கலான பாதைகளில் உதவும் ஜி.பி.எஸ். கருவி


வானவில் : சிக்கலான பாதைகளில் உதவும் ஜி.பி.எஸ். கருவி
x
தினத்தந்தி 12 Jun 2019 3:38 PM IST (Updated: 12 Jun 2019 3:38 PM IST)
t-max-icont-min-icon

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் வழிகாட்டும் ஜி.பி.எஸ். வந்த பின்பு வழி தெரியாமல் தேடி அலையும் சிரமம் பெருமளவு குறைந்திருக்கிறது.

ஹாங்காங் நகரை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜி.பி.எஸ். நுட்பத்தை மேலும் எளிதாக்கக் கூடிய வகையில் ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த கருவியை ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொண்டுவிட்டால் வாகன ஓட்டிகள் தவறான பாதையில் செல்லும் போது அறிவிக்கிறது.

அடுக்கடுக்கான ப்ளை ஓவர்களில் என்னதான் ஜி.பி.எஸ். இருந்தாலும் மேலே இருக்கிறோமா, கீழே இருக்கிறோமா என்று ஓட்டுனர்கள் குழம்பும் சூழ்நிலை ஏற்படும். இது போன்ற சிக்கலான பாதைகளில் இந்த கருவி வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே உள்ள கோணத்தை அளந்து சரியான பாதையில் வண்டி செல்கிறதா என்பதை தெரிவிக்கும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் எந்த ஜி.பி.எஸ். மாடலிலும் இந்த வசதி இல்லை. இந்த கருவி நூறு சதவிகிதம் துல்லியமாக செயல்படுகிறது என்று சோதனை முயற்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கூடிய விரைவில் இந்தக் கருவி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகின்றனர்.

Next Story