மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் + "||" + Kovilpatti and Ettayapuram areas The day after tomorrow is the resistor

கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்

கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள்
கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி,

கோவில்பட்டி, எட்டயபுரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கோவில்பட்டி மின்வினியோக செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாதாந்திர பராமரிப்பு பணி 

கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம், சிவஞானபுரம், செட்டிகுறிச்சி, சன்னதுபுதுக்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் கோவில்பட்டி, புதுகிராமம், இலுப்பையூரணி, சங்கரலிங்கபுரம், லாயல்மில் பகுதி, முகம்மதுசாலியாபுரம், இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், ஈராச்சி, கசவன்குன்று, துறையூர், காமநாயக்கன்பட்டி, முத்துநகர், சிட்கோ, ஜோதிநகர், புதுரோடு, வானரமுட்டி, காலாங்கரைப்பட்டி, குமரெட்டியாபுரம், கானாம்பட்டி, சங்கரலிங்கபுரம், நாலாட்டின்புத்தூர், இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, மெய்தலைவன்பட்டி, சிவஞானபுரம், வாகைத்தாவூர், சவலாப்பேரி, தளவாய்புரம், நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும்,

கழுகுமலை–எட்டயபுரம் 

கழுகுமலை, குமராபுரம், வேலாயுதபுரம், கரடிகுளம், சி.ஆர்.காலனி, வெள்ளப்பனேரி, குருவிகுளம், எப்போதும்வென்றான், எட்டயபுரம், கீழமங்கலம், பசுவந்தனை, நாகலாபுரம், கடம்பூர், ஒட்டநத்தம், குளத்தூர், சூரங்குடி, செட்டிகுறிச்சி, சிதம்பரம்பட்டி, கட்டாலங்குளம், வெள்ளாளன்கோட்டை, ஓலைகுளம், திருமங்கலகுறிச்சி, பெரியசாமிபுரம், மூர்த்தீஸ்வரம், கயத்தாறு நகர பஞ்சாயத்து பகுதிகள், ராஜாபுதுக்குடி, டி.என்.குளம், ஆத்திகுளம், தெற்கு இலந்தைகுளம், வடக்கு இலந்தைகுளம், சாலைபுதூர், மு.கைலாசபுரம், கீழக்கோட்டை, கொடியன்குளம், என்.புதூர், நாரைக்கிணறு, புளியம்பட்டி, ஆலந்தா பகுதி 1, பிராஞ்சேரி, இத்திகுளம், வடக்கு செழியநல்லூர், காங்கீஸ்வரன்குளம், குப்பனாபுரம், பருத்திகுளம், வடகரை மற்றும் காற்றாலை மின்தொடர்– 1, 2 ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.