ஆட்டோவில் ரே‌ஷன் அரிசி கடத்தல் டிரைவர் கைது


ஆட்டோவில் ரே‌ஷன் அரிசி கடத்தல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 2:58 PM GMT)

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் ரே‌ஷன் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

குளச்சல்,

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் ரே‌ஷன் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்கும் விதமாக போலீசாரும், பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தநிலையில் நேற்று காலை குளச்சல் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி, சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூடைகளில் 400 கிலோ ரே‌ஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, போலீசார் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் களியக்காவிளை மீனச்சல் பகுதியை சேர்ந்த ராஜன்(வயது 49) என்பதும், ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்து ராஜனை கைது செய்தனர்.

Next Story