ஆழ்வார்திருநகரி பகுதியில் கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி நேற்று மாலை ஆழ்வார்திருநகரி பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆழ்வார்திருநகரி ரதவீதியில் திறந்தவெளி வேனில் நின்று அவர் பேசுகையில், திராவிட இயக்கம் மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. நாடாளுமன்றத்தில் உங்கள் சார்பாக நான் குரல் கொடுப்பேன். செயல்படுவேன். இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை முடித்து வைப்பேன் என்றார்.
பின்னர் கனிமொழி எம்.பி. அங்கிருந்து புறப்பட்டு அழகியமணவாளன்புரம், செம்பூர், பால்குளம், கேம்பலாபாத், கடையனோடை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார்.
நிகழ்ச்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், நகர செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி. ஜெயசீலன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துப்பாண்டி, வெயிலுமுத்து, ஜெரால்டு, ஒன்றிய துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், தமிழர் தேசிய கொற்றம் தலைவர் வியனரசு உள்பட பலர் உடன் வந்தனர். முன்னதாக ஆழ்வார்திருநகரியில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கனிமொழி எம்.பி.யை வரவேற்றனர்.
Related Tags :
Next Story