வனப்பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்ததால் கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்


வனப்பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்ததால் கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 13 Jun 2019 4:15 AM IST (Updated: 13 Jun 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்ததால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்துக்கு பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கடல் நீர் ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் உட்புகுந்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

கோடியக்கரையில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் 27 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடுகள் உள்ளன.இங்கு மான், குதிரை, முயல், நரி, குரங்கு போன்ற விலங்குகளும், பறவைகளும் உள்ளன.

கோடியக்கரையில் நின்றுதான் இராமர் இலங்கையை பார்த்ததாக வரலாறு. அவர் நின்று பார்த்த இடத்தை ராமர் பாதம் என்று அழைக்கப்படுகிறது. ராமர்பாதத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். ராமர்பாதம் கோடியக்கரைக்கு சிறப்பு வாய்ந்த ஒன்று.

இந்த நிலையில் தொடர்ந்து சூறை காற்று வீசிவருவதால் உப்பளத்தில் புகுந்த கடல்நீர் அருகே உள்ள வினவிலங்கு கள் சரணாலயத்தில் உள்ள வனப்பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. இதனால் காடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கஜா புயலினால் கலையிழந்து போன வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள மரங்கள் தற்போது துளிர்விட்டு கொண்டு இருக்கிறது. தற்போது பலத்த சூறைகாற்றினால் கடல்நீர் உப்பளம் வழியாக சரணாலயத்தில் உள்ள வனப்பகுதிகளுக்கு உட்புகுவதால் மரங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

வனப்பகுதியில் கடல்நீர் புகுவதை தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story