மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்: 20 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் பதவி-இடஒதுக்கீடு விவரம் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளில் யார், யாரை? தேர்ந்தெடுக்கலாம், இட ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வார்டுகள் பிரிப்பு, வாக்குச்சாவடிகள் அமைப்பு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்றவற்றை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் நபர்கள் பற்றிய இடஒதுக்கீடு விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றியம், தேர்ந்தெடுக்கப்படும் ஆண்-பெண்கள் ஒதுக்கீடு விவரமும் (பொது), யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது (அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது) என்பது பற்றிய விவரமும் வருமாறு:-
பெத்தநாயக்கன்பாளையம்-பொது (எஸ்.டி), கெங்கவல்லி- மகளிர் (எஸ்.சி), மேச்சேரி- மகளிர் (எஸ்.சி.,), கொளத்தூர்- பொது (எஸ்.சி.,), காடையாம்பட்டி- பொது (எஸ்.சி.,), அயோத்தியாபட்டணம்-பொது (மகளிர்), ஏற்காடு- பொது (மகளிர்), ஆத்தூர்- பொது (மகளிர்), நங்கவள்ளி - பொது (மகளிர்), தாரமங்கலம் - பொது (மகளிர்), எடப்பாடி- பொது (மகளிர்), மகுடஞ்சாவடி-பொது (மகளிர்), சேலம்- பொது (மகளிர்), கொங்கணாபுரம்-பொது, வீரபாண்டி-பொது, பனமரத்துப்பட்டி-பொது, வாழப்பாடி-பொது, தலைவாசல்-பொது, ஓமலூர்-பொது, சங்ககிரி-பொது.
Related Tags :
Next Story