நாய்களுக்கு பரவும் ரத்த கழிச்சல் நோய் தடுப்பூசி போட கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தல்


நாய்களுக்கு பரவும் ரத்த கழிச்சல் நோய் தடுப்பூசி போட கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 7:57 PM GMT)

நாமக்கல் பகுதியில் நாய்களுக்கு ரத்த கழிச்சல் நோய் பரவி வருவதால், தடுப்பூசி போட கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நாமக்கல், 

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திற்கு பிறகு, அதாவது தென்மேற்கு பருவமழை தொடங்கும் நேரத்தில் நாய்களை ரத்த கழிச்சல் நோய் தாக்கி வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் மற்றும் இன்றி அண்டை மாவட்டங்களிலும் ஏராளமான நாய்கள் இந்த நோயால் அவதிப்பட்டு வருகின்றன.

வாந்தி, பேதி ஏற்படுவது இந்த நோயின் அறிகுறியாகும். பின்னர் அந்த நாய்கள் சாப்பிட முடியாமல் ஒரிரு நாட்களில் இறந்து விடும். கடந்த 2 வார காலமாக நாமக்கல் கால்நடை மருத்துவ மனைக்கு ரத்த கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அழைத்து வரும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எசேக்கியல் நொப்போலியன் கூறியதாவது:-

நாய்களுக்கு ரத்த கழிச்சல் நோய் ஏற்படாமல் இருக்க மார்ச் மாதங்களில் தடுப்பூசி போட்டு வருகிறோம். ஆனால் சிலர் தடுப்பூசி போடாமல் விட்டு விட்டனர். அதனால் நாய்கள் ரத்த கழிச்சல் நோயால் அவதிப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 200 நாய்களுக்கு இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

Next Story