மாவட்ட செய்திகள்

கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டய படிப்பிற்கான 2-ம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம் + "||" + Gandharvat State Government can apply for 2nd phase of the Phase of Ph.D at Polytechnic College

கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டய படிப்பிற்கான 2-ம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்

கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டய படிப்பிற்கான 2-ம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்
கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டய படிப்பிற்கான 2-ம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்.
புதுக்கோட்டை,

2019-20-ம் கல்வி ஆண்டிற்கான கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு பட்டய படிப்பிற்கான 2-ம் கட்ட கலந்தாய்விற்காக தற்போது விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. நேரடி இரண்டாமாண்டு துறை வாரியாக காலியிடத்திற்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாகும். மேலும் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இங்கு அமைப்பியல் துறையில் 6 இடமும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் 1 இடமும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் 7 இடமும், கணினி அறிவியல் துறையில் 19 இடமும் காலியாக உள்ளன.


எந்திரவியல் துறையின் இடங்கள் பூர்த்தியாகி விட்டன. இதேபோல முதலாமாண்டு துறை வாரியாக காலியிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி கடைசி நாளாகும். முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான காலியிடங்கள் அமைப்பியல் துறையில் 27 இடமும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் 11 இடமும், கணினி அறிவியல் துறையில் 43 இடமும் காலியாக உள்ளன. எந்திரவியல் துறை மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இடங்கள் பூர்த்தியாகி விட்டன. மேலும் விவரங்களுக்கு கந்தர்வகோட்டை புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்களை மானியத்துடன் அமைக்க விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சூரிய சக்தியால் இயங்கும் உலர்ப்பான்களை மானியத்துடன் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
2. சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
3. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேளாண் எந்திரங்களை மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
4. தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்
தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (பொறுப்பு) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
5. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.