மாவட்ட செய்திகள்

திருப்பூர் கோர்ட்டில்லோக் அதாலத் மூலம் ரூ.66 லட்சத்திற்கு சமரச தீர்வு + "||" + In Tirupur court Rs .66 lakh Lok compromise solution Aadalat

திருப்பூர் கோர்ட்டில்லோக் அதாலத் மூலம் ரூ.66 லட்சத்திற்கு சமரச தீர்வு

திருப்பூர் கோர்ட்டில்லோக் அதாலத் மூலம் ரூ.66 லட்சத்திற்கு சமரச தீர்வு
திருப்பூர் கோர்ட்டில் லோக் அதாலத் மூலம் ரூ.66 லட்சத்திற்கு சமரச தீர்வு எட்டப்பட்டுள்ளது.
திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் நீதிபதி பத்பநாபன் கலந்து கொண்டு வழக்கை விசாரித்தார். மொத்தம் 25 வழக்குகள் சமரச தீர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 6 சொத்து வழக்கு மற்றும் 9 மோட்டார் வாகன வழக்குகளுக்கு சமரச தீர்வு எட்டப்பட்டது. இந்த சமரச தீர்வில், விபத்தில் இறந்த திருப்பூர் அவினாசி ரோட்டை சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.24 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. முருகேசன் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி இருசக்கர வாகனத்தில் அவினாசி ரோடு அம்மாபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அவருடைய உறவினர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் நேற்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் இன்சூரன்சு நிறுவனத்தினருக்கும் இடையே சமரச தீர்வு எட்டப்பட்டது. இதன்படி விபத்தில் இறந்த முருகேசன் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.24 லட்சத்தை வழங்கும் படி இன்சூரன்சு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதற்கான ஆணையையும் நீதிபதி பத்மநாதன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கினார். இதுபோல விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட 6 சொத்து வழக்கிற்கு ரூ.38 லட்சமும், 9 மோட்டார் வாகன வழக்கிற்கு ரூ.28 லட்சம் என மொத்தம் ரூ.66 லட்சத்திற்கு சமரச தீர்வு எட்டப்பட்டது.