மாவட்ட செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் சேர கலெக்டர் அழைப்பு + "||" + Collector call to join unorganized labor welfare

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் சேர கலெக்டர் அழைப்பு

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் சேர கலெக்டர் அழைப்பு
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து பலனடையுமாறு கலெக்டர் சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராதொழிலாளர்கள் நலவாரியத்தின் கீழ் உடலுழைப்பு தொழிலாளர்களான பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில், தையல், சலவை, பொற்கொல்லர், மண்பாண்டம், விசைத்தறி, சமையல், தெரு வியாபாரம், ஆட்டோ உட்பட 113-க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து வரும் தொழிலாளர்கள் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியம் மற்றும் இதர 16 நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படுகின்றனர். உறுப்பினர்களாகச் சேரும் தொழிலாளர்களுக்கு வாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 முதல் ரூ.8,000 வரையும், திருமண உதவித்தொகையாக ரூ.5000, மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6000, கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500, ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1000 வீதமும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு ரூ.25,000 மற்றும் விபத்துமரணத்திற்கு ரூ.1லட்சம் முதல் அதிக பட்சமாக ரூ.5 லட்சம் வரையும் மற்றும் விபத்து ஊனத்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளாத அமைப்பு சாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு வந்து தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு கூறினார்.அப்போது தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.