3 மாதம் ஏ.சி-க்குள் பதுங்கி இருந்த பாம்பு, அதிர்ச்சியில் வீட்டு உரிமையாளர்


3 மாதம் ஏ.சி-க்குள் பதுங்கி இருந்த பாம்பு, அதிர்ச்சியில் வீட்டு உரிமையாளர்
x
தினத்தந்தி 13 Jun 2019 2:50 PM IST (Updated: 13 Jun 2019 2:50 PM IST)
t-max-icont-min-icon

3 மாதம் ஏ.சி-க்குள் குடியிருந்த பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டிற்குள் விட்டனர்.

புதுச்சேரி தேங்காய்திட்டுப் பகுதியில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் பொருத்தப்பட்டிருந்த ` ஏ.சியை ஆன்’ செய்திருக்கிறார். அப்போது ஏ.சிக்குள் இருந்து புதுவிதமான சத்தம் கேட்டது. ஒரு பக்கத்திலிருந்து மட்டும் காற்று வருவதை உணர்ந்ததும் ஏ.சி. பழுதாகிவிட்டது என்று அதை உடனே நிறுத்திவிட்டார்.

அதையடுத்து நேற்று காலை ஏ.சி. மெக்கானிக்கை அழைத்து சரி செய்யும்படி கூறியிருக்கிறார். பழுதை சரி செய்வதற்காக ஏசியைக் கழற்றியபோது அதனுள் 3 பாம்பின் தோல்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனது கையில் இருந்த ஸ்க்ரூ டிரைவரால் அந்தத் பாம்பு தோல்களை நகர்த்தினார். அப்போது அங்கு மறைந்திருந்த சுமார் 2 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு வேகமாகச் சென்று ஏ.சியின் மற்றொரு புறத்திற்குச் சென்று ஒளிந்துகொண்டது.

இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ஏழுமலை வனத்துறைக்குத் தகவல் அளித்தார். உடனே அங்கு சென்ற வனத்துறை ஊழியர் கண்ணதாசன் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி பாம்புக்குக் காயம் ஏற்படாமல் அதைப் பிடித்து காட்டிற்குள் விட்டார்.

அடிக்கடி இரை தேடுவதற்கு வெளியில் சென்று மீண்டும் அங்கேயே வந்து தங்கியிருக்கிறது. பாம்பு தோலை உரித்தால் அது வளர்ச்சி எனப்படும். 3 தோல்கள் இருப்பதைப் பார்க்கும்போது சுமார் 3 மாதங்கள் அந்தப் பாம்பு ஏ.சிக்குள் கூடாரம் அமைத்துத் தங்கியிருக்கிறது என்று அதிர்ச்சி கொடுத்தனர் வனத்துறை அதிகாரிகள்.

Next Story