சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் 21 பேர் கைது

சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்  21 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2019 3:00 AM IST (Updated: 13 Jun 2019 5:09 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் சாலைமறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் சாலைமறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலைமறியல் 

நெல்லை தச்சநல்லூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும், சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி தலைவர் முத்து பாண்டியன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

21 பேர் கைது 

சாலைமறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 21 பேரை சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story