இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2019 4:15 AM IST (Updated: 13 Jun 2019 8:27 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர் காவியா தலைமை தாங்கினார். சங்க மாவட்ட தலைவர் பதில்சிங், மாவட்ட துணைத்தலைவர் சஜ்ஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story