மாவட்ட செய்திகள்

வாலிபர்கள் கைதை கண்டித்து மறியல் சாலையின் நடுவே மரத்துண்டுகளை போட்டதால் பரபரப்பு + "||" + The young men scolded me in the middle of the stumbling blocks of protest

வாலிபர்கள் கைதை கண்டித்து மறியல் சாலையின் நடுவே மரத்துண்டுகளை போட்டதால் பரபரப்பு

வாலிபர்கள் கைதை கண்டித்து மறியல் சாலையின் நடுவே மரத்துண்டுகளை போட்டதால் பரபரப்பு
கூத்தாநல்லூர் அருகே வாலிபர்கள் கைதை கண்டித்து பொதுமக்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையின் நடுவே மரத்துண்டுகளை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் கிளியனூர் கிராமத்தில் தங்கமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாயனூர் கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம் (வயது29), சுதாகர் (21), சிவனேசன் (20) ஆகிய 3 பேரும் பார்வையாளர் இடத்தில் நின்று நடனமாடியதாக கூறப்படுகிறது. இதை கிளியனூர் வடக்கு தெருவை சேர்ந்த பன்னீர் மகன் மணிகண்டன் தட்டிக்கேட்டார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.


அப்போது அங்கு இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வடபாதிமங்கலம் கடைவீதிக்கு மணிகண்டன் சென்றார். அப்போது சோமசுந்தரம், சுதாகர், சிவனேசன் 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மணிகண்டன் வடபாதிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோமசுந்தரம், சுதாகர், சிவனேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்தநிலையில் வாலிபர்கள் கைதை கண்டித்தும்

கைது செய்த 3 பேரையும் தங்களிடம் காட்ட வேண்டும் என்று கூறி கிளியனூர் கிராமத்தை சேர்ந்த சிலர் வடபாதிமங்கலத்தில் திடீரென சாலையின் குறுக்கே மரத்துண்டுகளை போட்டு மறியலில் ஈடுபட்ட னர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் கைதானவர்களை, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் காட்டினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வடபாதிமங்கலம்-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. காரைக்காலில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் தேரோட்டம் தொடங்கியது
காரைக்காலில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் தேரோட்டம் தொடங்கியது.
3. திருவாரூர் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
திருவாரூர் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
4. குலமாணிக்கம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலின் திருவிழா நடைபெற்றது.
5. பொன்னகரம் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
பொன்னகரம் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை