திருக்காட்டுப்பள்ளியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


திருக்காட்டுப்பள்ளியில் 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 7:13 PM GMT)

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்வாணன், சுகாதார ஆய்வாளர்கள் ராமநாதன், ஆனந்தன், குமார், துப்புரவு மேற்பார்வையாளர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் குழுவினர் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? பாலித்தீன் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ே்சாதனை மேற்கொண்டனர்.

அப்போது சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்்து 10 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் சோதனையின்போது கடை உரிமையாளர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Next Story