மாவட்ட செய்திகள்

திருவையாறு அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி + "||" + The poor man kills the boy and kills the poor near Thiruvaiyar

திருவையாறு அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திருவையாறு அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அணைக்குடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் தரணிதரன் (வயது7). செம்மங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த தரணிதரன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலுக்கு சென்றான். அங்கு வயலில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தன. இந்த மின்கம்பியை விளையாட்டாக சிறுவன் தரணிதரன் தொட்டான்.


பரிதாப சாவு

இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தரணிதரன் சம்பவ இடத்திலேயே கிடந்தான். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தரணிதரனை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பஸ் மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
பொறையாறு அருகே பஸ் மோதி நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
2. ராட்சத அலையில் சிக்கி சிறுவன் பலி; 2 பேர் மாயம் கடலில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்றபோது பரிதாபம்
குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கடலில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்ற சிறுவன் ராட்சத அலையில் சிக்கி பலியானான். 2 பேர் மாயமானார்கள். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
3. லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தம்பதி பலி
லாலாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மகளை பார்த்து விட்டு வந்த தம்பதி பரிதாபமாக இறந்தனர்.
4. முயல் வேட்டைக்கு சென்றபோது பரிதாபம் மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி தொழிலாளி சாவு
நம்பியூர் அருகே முயல் வேட்டைக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி பனியன் கம்பெனி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5. அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.