மாவட்ட செய்திகள்

கடையில் பதுக்கிய1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் + "||" + Stuck in the store 1 tonnes of plastic materials confiscated Rs 50 thousand fine for the owner

கடையில் பதுக்கிய1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கடையில் பதுக்கிய1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சேலத்தில் கடையில் பதுக்கிய 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்,

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் மாநகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததுடன் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில், மாநகர் நல அலுவலர் பார்த்திபன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் இருந்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் மாநகராட்சியில் 5 மாதங்களில் 11 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.9.68 லட்சம் அபராதம் வசூல்
சேலம் மாநகராட்சியில் கடந்த 5 மாதங்களில் 11 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2. திருச்சியில் கடைகளில் அதிரடி சோதனை, 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - உரிமையாளர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்
திருச்சியில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
3. நெல்லையில் 3,528 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
நெல்லையில் 3,528 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.5½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
4. சிதம்பரத்தில், தடை செய்யப்பட்ட 3.40 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
சிதம்பரத்தில் தடை செய்யப்பட்ட 3.40 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. கூத்தாநல்லூரில், ரூ.60 ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
கூத்தாநல்லூரில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை