மாவட்ட செய்திகள்

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35½ அடியாக உயர்வு குளச்சலில் 16 மி.மீ. மழை பதிவு + "||" + The Perunachi dam water level is 35 ½ feet high at 16 mm Rain rain

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35½ அடியாக உயர்வு குளச்சலில் 16 மி.மீ. மழை பதிவு

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35½ அடியாக உயர்வு குளச்சலில் 16 மி.மீ. மழை பதிவு
குமரியில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35½ அடியாக உயர்ந்துள்ளது. குளச்சலில் 16 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாகர்கோவில்,

கேரள மாநிலத்தில் பெய்ய தொடங்கிய தென்மேற்கு பருவமழை குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் இருந்து அதிகாலை வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. நாகர்கோவில் நகர பகுதியில் நேற்று பகலில் மழை இல்லை. ஆனாலும் வானம் மேகமூட்டத்துடனும், இடையிடையே வெயில் அடித்தபடியும் இருந்தது. இந்தநிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் மரம் விழுந்து மின்வயர்கள் அறுந்து விழுந்தன.


நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை- 14.4, பெருஞ்சாணி- 4, சிற்றார் 1- 9.2, சிற்றார் 2- 8, புத்தன் அணை- 3.2, மாம்பழத்துறையாறு- 7, முக்கடல்- 14, பூதப்பாண்டி- 5.2, களியல்- 12.4, கன்னிமார்- 9.4, கொட்டாரம்- 11, குழித்துறை- 11, மயிலாடி- 4.8, நாகர்கோவில்- 3.2, சுருளக்கோடு- 10, தக்கலை- 6.4, குளச்சல்- 16.4, இரணியல்- 7, கோழிப்போர்விளை- 12, அடையாமடை- 11, குருந்தங்கோடு- 7, முள்ளங்கினாவிளை- 5, ஆனைக்கிடங்கு- 5.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

35½ அடியாக உயர்வு

மழை குறைந்தாலும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 767 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 337 கன அடியும், சிற்றார்-1 அணைக்கு 48 கன அடியும், சிற்றார்-2 அணைக்கு 31 கன அடியும் தண்ணீர் வந்தது.

இதனால் நேற்று பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 10.40 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 35.50 அடியாகவும், சிற்றார்-1 அணை நீர்மட்டம் 7.28 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 7.38 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 44.29 அடியாகவும் இருந்தது. இதில் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 34.40 அடியாக இருந்தது. நேற்று மாலை இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடிக்கு மேல் உயர்ந்து 35.50 அடியை எட்டியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை; பவானியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. பவானியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
2. முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் தொடர்மழை காரணமாக ஓடை, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஓடை, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
3. ஊட்டி அருகே மழை காரணமாக, தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன - டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஊட்டி அருகே மழை காரணமாக ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. டிரைவரின் சாமர்த்தியத்தால்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
4. மாவட்டம் முழுவதும் பலத்த மழை; விவசாய பணிகள் முழுவீச்சில் தொடங்கின
மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் முழுவீச்சில் தொடங்கி உள்ளது.
5. வீட்டிலேயே குப்பைகளை உரமாக்கும் திட்டம்: மாணவர்களுக்கு சைக்கிள் பரிசு
திருச்சி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு, குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை வீட்டில் செயல்படுத்திய மாணவர்களுக்கு சைக்கிளை பரிசாக அதிகாரிகள் வழங்கினர்.