மாவட்ட செய்திகள்

இரும்பு கம்பியால் இளநீர் பறித்தபோதுமின்சாரம் தாக்கி வாலிபர் சாவு + "||" + When the water is drained by the iron wire Woman killed by electricity

இரும்பு கம்பியால் இளநீர் பறித்தபோதுமின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

இரும்பு கம்பியால் இளநீர் பறித்தபோதுமின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
பொன்னேரி அருகே இளநீர் பறித்தபோது மின்கம்பி உரசியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். காப்பாற்ற முயன்ற உறவினரும் பரிதாபமாக இறந்தார்.
பொன்னேரி, 

பொன்னேரி அருகே பெருஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 42). இவரது தம்பி மகன் தட்சிணாமூர்த்தி (18). நேற்று தட்சிணாமூர்த்தி அந்த பகுதியில் உள்ள தென்னை மரத்தில் இரும்பு கம்பியால் இளநீரை பறித்தார்.

அப்போது அந்த இரும்பு கம்பி மரத்தின் அருகே இருந்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி தட்சிணாமூர்த்தி உடல் கருகி பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற விசுவநாதனும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசுவநாதன், தட்சிணாமூர்த்தி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு மேலும் ஒரு தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை
சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு தொழிலாளிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. ஜெகதேவியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் சாவு
ஜெகதேவியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...