மாவட்ட செய்திகள்

முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு : காங்கிரஸ் வலியுறுத்தல் + "||" + 5 percent reservation to Muslims: Congress Urges

முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு : காங்கிரஸ் வலியுறுத்தல்

முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு : காங்கிரஸ் வலியுறுத்தல்
முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மும்பை, 

மத்திய அரசு நாட்டில் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்து உள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள மதரசா பள்ளிகளை நவீனமயமாக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறியதாவது:-

மராட்டியத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எந்த முயற்சியும் செய்யவில்லை.

மதரசாக்களை மேம்படுத்தும் திட்டம் ஏற்கனவே மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அறிவிக்கப்பட்ட ஒன்று தான்.

இவ்வாறு அவர் கூறினார்.