மாவட்ட செய்திகள்

பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல் + "||" + Prime Minister financial assistance program All farmers can apply

பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் பயன்பெற அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
விருதுநகர்,

பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 எக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 நிதி உதவியானது, 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

மேலும் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்பே பட்டாதாரர் இறந்திருந்தாலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால் அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வருகிற 30-ந்தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இதற்கென தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் சேர கலெக்டர் அழைப்பு
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் சேர்ந்து பலனடையுமாறு கலெக்டர் சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
புயல் பாதிப்பை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
3. விருதுநகர் மாவட்டத்தில், 17 வாக்கு காகித சரிபார்ப்பு எந்திரங்கள் மாற்றப்பட்டன - கலெக்டர் சிவஞானம் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் வாக்குப் பதிவின் போது 7 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 17 வாக்குப்பதிவு காகித சரிபார்ப்பு எந்திரங்களும் மாற்றப்பட்டதாகவும், வாக்குப்பதிவு தொடர்பாக வேட்பாளர்களிடம் இருந்து புகார்கள் ஏதும் பெறப்படவில்லை என்றும் கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.
4. ‘வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்’ கலெக்டர் தகவல்
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
5. தேர்தல் பணிகள், பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கண்காணிப்பு - கலெக்டர் சிவஞானம் தகவல்
பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவஞானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-