மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் + "||" + Regarding child abuse violations Report a complaint

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

குழந்தைகள் உரிமை 


தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் குழந்தை உரிமை மீறல்கள் மீதான அமர்வு வருகிற 21–ந் தேதி ராமநாதபுரத்தில் நடக்கிறது. அந்த அமர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களிலும் குழந்தை உரிமை மீறல்கள் மீதான தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு நடைபெறுவது குறித்து அறிவிப்பு வைக்கப்பட வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், விடுதிகள், பயிற்சி நிறுவனங்கள், குழந்தைகள் இல்லங்கள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் அறிவிப்பு பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இணையதளத்தில் அமர்வு குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தின் போதும் பள்ளிகளில் நடைபெறும் காலை வழிபாட்டின் போதும் அமர்வு குறித்து தெரிவிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பெற்றோர்களுக்கு வாரம் ஒரு முறை விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

17–ந் தேதி 


மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்கள் குறித்த ஏதேனும் புகார்கள் இருந்தால் மக்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு, 176, முத்து சுரபி பில்டிங், மணிநகர், பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடி – 3 என்ற முகவரியில் இயங்கி வரும் அலுவலகத்தில் வருகிற 17–ந் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

வருகிற 21–ந் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் குழந்தை உரிமை மீறல்கள் மீதான அமர்வின் போதும் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நேரில் தெரிவிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தை 0461–2331188, 97870 02395, 94880 68588 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பெறப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு 21–ந் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் குழந்தை உரிமை மீறல்கள் மீதான அமர்வின் போது தீர்வு காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.