குலசேகரன்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி


குலசேகரன்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
x
தினத்தந்தி 15 Jun 2019 3:00 AM IST (Updated: 14 Jun 2019 7:31 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியானார். மற்றொரு படுகாயம் அடைந்தார்.

உடன்குடி, 

குலசேகரன்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியானார். மற்றொரு படுகாயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிள் 

நெல்லை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் நாராயணன் (வயது 77). இவருடைய மகன் முரளி. இவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு பெருமாள் கோவிலில் பூசாரியாக உள்ளார். இதனால் முரளி தனது குடும்பத்துடன் குலசேகரன்பட்டினம் வந்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் காலையில் நாராயணன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் ஆறுமுகம் (63) என்பவருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டினார்.

பலி 

மோட்டார் சைக்கிள் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பகுதியில் சென்ற போது நிலை தடுமாறி விபத்தில் சிக்கியது. இதில் 2 பேருக்கும் பலத்த காயம் அடைந்தனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாராயணன் நேற்று முன்தினம் இரவு உயிர் இழந்தார். ஆறுமுகத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story