மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரிவிடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல் + "||" + Government School, Polytechnic College Students can apply to join the hotel Collector information

அரசு பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரிவிடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்

அரசு பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரிவிடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்
கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கிரு‌‌ஷ்ணகிரி, 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு 21 விடுதிகளும், மாணவிகளுக்கு 14 விடுதிகளும், பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு ஒரு விடுதியும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும், கல்லூரி மாணவர்களுக்கு 2 விடுதியும், மாணவிகளுக்கு 4 விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கிற மாணவ, மாணவிகளும் கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மை விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 20-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.
2. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 40,557 பயனாளிகள் விவரம் சேகரிப்பு கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 40 ஆயிரத்து 557 பயனாளிகள் விவரங்கள் சேகரிக்கும் பணி நடப்பதால் பொதுமக்கள் உரிய ஆவணங்கள் அளித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
3. வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறியுள்ளார்.
4. 24 இருளர் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்படும் கலெக்டர் தகவல்
24 இருளர் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
5. ஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கம் கலெக்டர் தகவல்
ஜவ்வாதுமலை கோடை விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, வேலூர் வழியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.