திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 4 முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே நீலக்குடியில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நடப்பு கல்வி ஆண்டில் 4 முதுகலை பட்டப்படிப்புகளை புதிதாக அறிமுகம் செய்ய முடிவு செய்யப் பட்டது.

அதன்படி எம்.எஸ்சி. புள்ளி விவரம்-கணிதம், எம்.எஸ்சி. தோட்டக்கலை- மலர் சாகுபடி, எம்.பி.ஏ. சுற்றுலா- விருந்தோம்பல் மேலாண்மை உள்ளிட்ட 4 முதுகலை பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த 4 முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. காலை 9 மணி, மதியம் 2 மணி என 2 அமர்வுகளாக தேர்வு நடைபெற்றது.

விரைவில் முடிவுகள்

நுழைவுத்தேர்வில் மாணவர்கள் 78 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story