சிவகங்கை- தேவகோட்டையில் கோசாலை அமைக்கும் திட்டம்; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
சிவகங்கை-தேவகோட்டையி்ல் கோசாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை நகரில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தி வரத்துகால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- சிவகங்கை நகரில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல்கட்டமாக தற்போது சிவகங்கை புதூர் கண்மாய் மற்றும் வீரப்பன் கண்மாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து ஊருணிகளும் சீரமைக்கப்பட உள்ளன.
வரும் காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் ஊருணி, குளங்களில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ேமலும் வரத்துகால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் ஆக்கிரமிப்பு செய்தவர்களே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.
தண்ணீரை தேக்கிவைப்பதால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். சிவகங்கை நகரில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் போது, முத்தபட்டி என்ற இடத்தி்ல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து வரும் தண்ணீரை கொண்டு சுமார் 50 ஏக்கர் அரசு நிலத்தில் புல் வளர்க்கவும், அத்துடன் சிவகங்கை-ேதவகோட்டை யில் 10 ஏக்கர் பரப்பில் கோசாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் புல் கோசாலையில் உள்ள மாடுகளுக்கு உணவாக பயன்படுத்தப்படும் அத்துடன் மாட்டுச்சாணத்தில் இருந்து பயோ கியாசும் தயாரிக்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி, நகராட்சி ஆணையாளர் அயூப்கான், மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, சமூக ஆர்வலர் வக்கீல் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story