இடையமேலூர், கீழப்பூங்குடியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம்; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


இடையமேலூர், கீழப்பூங்குடியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம்; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

இடையமேலூர் மற்றும் கீழப்பூங்குடியில் ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்ட பூமிபூஜையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் இடையமேலூர் ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பிலும், கீழப்பூங்குடி ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பிலும் புதிய சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா் பாஸ்கரன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்து பேசியதாவது:- சிவகங்கை ஒன்றியத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் சமுதாய கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை மனுக்களை பெற்று, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனர்.வடிவேல், இடைய மேலூர் கூட்டுறவு வங்கி தலைவா் சந்திரன், சிவகங்கை தாசில்தார் கண்ணன், கூட்டுறவு வங்கி இயக்குனா்கள் சசிக்குமார், பலராமன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story