கிரு‌‌ஷ்ணகிரியில் மருந்தாளுனர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


கிரு‌‌ஷ்ணகிரியில் மருந்தாளுனர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரியில், பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வழங்கிட வலியுறுத்தி மருந்தாளுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வழங்கிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கதிர்வேல், சுரே‌‌ஷ், சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க நிர்வாகி சந்திரன், மாவட்ட செயலாளர் சதானந்தம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தொடர் போராட்டங்களால் நடந்த பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளில் ஒரு பகுதி 308 காலி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு கோரிக்கைகளை மீது உரிய அரசாணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஏற்றுக் கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வெளியிடவில்லை.

எனவே அரசாணை வெளியிட வேண்டும். குறிப்பாக பேச்சு வார்தையில் ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 32 மாவட்ட மருந்து கிடங்குகளில், மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். 3 கட்ட பதவி உயர்வு பணியிடங்கள் மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குனர் மருந்தியல் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.நோயாளிகளின் எண்ணிக்கைக்குகேற்ப மருந்து விதிக்கோடுபடி கூடுதலாக மருந்தாளுனர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். தலைமை மருந்தாளுனர், மருந்து கிடங்கு அலுவலர் ஆகிய பதவி உயர்வு கலந்தாய்வில் போதுமான கால அவகாசத்துடன் முறைப்படி நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றிட வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story