தஞ்சை அருகே ரெயில் தண்டவாளத்தில் தீ வைத்த முதியவர் கைது


தஞ்சை அருகே ரெயில் தண்டவாளத்தில் தீ வைத்த முதியவர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2019 3:45 AM IST (Updated: 16 Jun 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ரெயில் தண்டவாளத்தில் தீ வைத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம்-அம்மாப்பேட்டைக்கு இடையே ரெயில் தண்டவாளத்தில் கற்கள், மரக்கட்டைகளை வைப்பது, வைக்கோல், சாக்குகளை போட்டு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய தஞ்சை ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சாலியமங்கலம்-அம்மாப்பேட்டை இடையே ரெயில் தண்டவாளத்தில் மர்மநபர் ஒருவர், கற்களையும், மரக்கட்டைகளையும் அடுக்கியதுடன், சாக்குகள், வைக்கோல்களை போட்டு தீ வைத்து கொண்டிருந்தார்.

கைது

இதை பார்த்த கேட் கீப்பர், மர்மநபரை பார்த்து சத்தம்போட்டதுடன், இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்மநபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், பாபநாசம் தாலுகா அருந்தவபுரம் அருகே திருக்கோவில்பத்து மேலதெருவை சேர்ந்த சண்முகம்(வயது50) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story