இதுவரை இல்லாத வகையில் ஊசுட்டேரி முற்றிலும் வறண்டது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


இதுவரை இல்லாத வகையில் ஊசுட்டேரி முற்றிலும் வறண்டது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி முற்றிலும் வறண்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

வில்லியனூர்,

புதுவை மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக ஊசுட்டேரி திகழ்ந்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரியின் சில ஏக்கர் பரப்பளவு தமிழக பகுதியான பூத்துறை, காசிப்பாளையம் பகுதியிலும் பரவலாக விரிந்துள்ளது.

இந்த ஏரி தண்ணீரை நம்பி அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும் புதுச்சேரி அரசின் சுற்றுலா துறை சார்பில் ஏரியில் படகு சவாரியும் நடத்தப்பட்டு வந்தது.

குறிப்பிட்ட சீசன்களில் இந்த ஏரிக்கு இனப்பெருக்கத்துக்காக வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். அப்போது ஏரியை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். கோடை காலத்திலும் இந்த ஏரியில் சிறிதளவாவது தண்ணீர் இருக்கும். ஆனால் இந்த வருடம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊசுட்டேரி முற்றிலும் வறண்டுபோனது. மேலும் ஏரியின் நீர்தேங்கும் பகுதி காய்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டு விட்டது.

Next Story