குடிநீர் பிரச்சினையால் தமிழ்நாடே அல்லல்படுகிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பேச்சு
“குடிநீர் பிரச்சினையால் தமிழ்நாடே அல்லல்படுகிறது” என்று ராமேசுவரத்தில் நடந்த விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பேசினார்.
ராமேசுவரம்,
தமிழ்நாடு விவிசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ராமேசுவரத்தில் தொடங்கியது. விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளருமான பாலகிருஷ்ணன் கூட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது முக்கிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் உள்ள ஓட்டல்களை மூடும் அவல நிலை வந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் ஐ.டி. கம்பெனிகளில் அலுவலகத்திற்கு யாரும் வர வேண்டாம் எனவும், வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுமாறும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதுமே மக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர். ஆனால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளம், கண்மாய்களை தூர்வாருவதோடு, மழை நீரை சேமிக்கும் வகையில் பல திட்டங்களை கொண்டுவரவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருவதில்தான் அரசு அக்கறை காட்டி வருகிறது. குறிப்பாக 8 வழிச்சாலை திட்டம், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைப்பது போன்ற திட்டங்களை கொண்டு வருவதில்தான் அரசு அக்கறை காட்டி வருகிறது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும் அந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, அந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகின்றது. காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரையிலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறக்காததுடன், மழை பெய்தால் மட்டும்தான் தண்ணீர் திறக்கப்படும் எனவும் கர்நாடக அரசு தெரிவித்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயம் அடியோடு பாதிக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
இந்திய, இலங்கை நாட்டு மீனவர்கள் சந்தித்து நடத்தி வந்த பேச்சுவார்த்தை கடந்த சில வருடங்களாகவே நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய-மாநில அரசுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மீன் பிடி படகுகளுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்களுக்கு எதிரான திட்டங்களை தடுப்பது ெதாடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் வருகிற 18-ந் தேதி தஞ்சாவூரில் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story