தண்டவாள பராமரிப்பு பணிக்காக மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
தென்னக ரெயில்வேயின் கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக அந்த பாதையில் செல்லும் ஒரு சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் இன்று ஒரு நாள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி மற்றும் வண்டலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் இன்று(ஞாயிற்றுக் கிழமை) ஒரு நாள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையில் இருந்து இன்று காலை சென்னை புறப்பட்டு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.12636) காட்டாங்குளத்தூர் ரெயில் நிலையத்தில் சுமார் ¾ மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.
ராமேசுவரத்தில் இருந்து புவனேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.18495) இன்று காலை 8.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 10.50 மணிக்கு புறப்படும்.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் சொகுசு ரெயில்(வ.எண்.22762) இன்று ஒரு நாள் மட்டும் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்படும்.
குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16128) நேற்று இரவு 9.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 11.35 மணிக்கு புறப்பட்டது. இதனால், இன்று காலை 7.50 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய இணைப்பு ரெயில்(வ.எண்.16130) 2 மணி நேரம் தாமதமாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.
ரெயில்களின் இயக்கத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், இந்த ரெயில்களுக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Tags :
Next Story